முன்னுரை :

நாங்கெல்லாம் சின்னப் பையனா இருந்தப்போ டிவி. எல்லாம் ஏது? இப்பப் பாரு, தவழும்போதே ரிமோட்டும் கையுமாத்தான் தவழுது. செல்போன்லதான் பேசவே ஆரம்பிக்குது என்று அங்கலாய்ப்பவரா நீங்கள்? தலைமுறை தலைமுறையாக வசதிகள் மட்டும் மாறவில்லை. குழந்தைகளுக்கு போதிக்கும் கதைகள் கூட மெருகூட்டப் படுகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு. இவை சில நான் என் மகனுக்கு சொல்லிக் கொடுத்தவை. சில அவன் எனக்கு சொல்லிக் கொடுத்தவை.

குறிப்பு:

தயவு செய்து ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு தலைமுறையாக படிக்கவும். அப்போதுதான் சரியாகப் புரியும். நன்றி..

Sunday, November 22, 2009

பழி வாங்கிய புறா.

தலைமுறை - 2.

ஒரு காட்டில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் ஒரு புறா ஜோடி கூடு கட்டி வாழ்ந்து வந்தது. பெண் புறா தினமும் முட்டை இடும். அதே மரத்தின் கீழ் உள்ள ஒரு பொந்து ஒன்றில் ஒரு நாகம் வாழ்ந்து வந்தது. அது தினமும் மரத்தின் மேலேறி பெண் புறா இடும் முட்டைகளைக் குடித்து விட்டு வந்து விடும். தினமும் இதனை வேதனையுடன் அந்தப் புறா ஜோடி பார்க்கும். ஆனால் அதனால் எதுவும் செய்ய இயலவில்லை. அதனால் அவை ஒரு முடிவுக்கு வந்தன. எப்படியாவது அந்தப் பாம்பைப் பழி வாங்குவது என முடிவு செய்து அதற்கான வழியை யோசித்தது. முடிவில் ஒரு வழியையும் கண்டுபிடித்து செயல்படுத்தியது.
அந்த நாட்டு அரசன் குளிக்க செல்லும்போது அந்த அரசனின் முத்து மாலையைக்
கவ்விக் கொண்டு பறந்தது. காவலர்கள் அதனைத் துரத்திக் கொண்டு வந்தனர். அது முத்து மலையை அந்தப் பாம்பு வாழும் பொந்தினுள் போட்டது. காவலர்கள் மலையை எடுக்க வந்த பொழுது பாம்பு புஷ் என சீறியது. அவர்கள் பாம்பைக் கொன்று மாலையை எடுத்துச் சென்றனர் பின்னர் அவை அந்த மரத்தை விட்டு என்றும் பிரியாமல் நெடுங்காலம் வாழ்ந்தது.

Sunday, November 8, 2009

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

தலைமுறை - 1

ஒரு காட்டில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் ஒரு புறா ஜோடி கூடு கட்டி வாழ்ந்து வந்தது. பெண் புறா தினமும் முட்டை இடும். அதே மரத்தின் கீழ் உள்ள ஒரு பொந்து ஒன்றில் ஒரு நாகம் வாழ்ந்து வந்தது. அது தினமும் மரத்தின் மேலேறி பெண் புறா இடும் முட்டைகளைக் குடித்து விட்டு வந்து விடும். தினமும் இதனை வேதனையுடன் அந்தப் புறா ஜோடி பார்க்கும். ஆனால் அதனால் எதுவும் செய்ய இயலவில்லை. அதனால் அவை ஒரு முடிவுக்கு வந்தன. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்ற பழமொழியைக் கருத்தில் கொண்டு அவை அந்த மரத்தை விட்டு வேறொரு மரத்தை தேடிக் கண்டுபிடித்து அங்கே புதிய கூடு கட்டிக் கொண்டு வாழத் துவங்கியது.

Monday, September 28, 2009

தாகம் எடுத்த காகம்.

தலை முறை - 2.

ஒரு ஊரில் ஒரு காகம் வாழ்ந்து வந்தது. அது இரை தேடி ஒரு நாள் வெகு தூரம் பறந்தது. துரதிர்ஷ்டவசமாக அன்று அதற்கு ஒரு இரை கூட கிடைக்கவில்லை. வெகு தூரம் பறந்ததால் ரொம்ப தாகம் எடுத்தது. வழியில் ஏதாவது நீர்நிலை தென்படுகிறதா என பரந்து கொண்டே தேடியது. நீர் இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. முடிவில் அது தூரத்தில் ஒரு பானை இருப்பதைப் பார்த்து "ஆஹா .. கடவுள் நம்மை கை விடவில்லை.. தூரத்தில் ஒரு பானை இருக்கிறது. கிடைக்கும் நிச்சயம் தண்ணீர் கிடைக்கும்"என்று நினைத்துக்கொண்டே அருகில் சென்று பார்த்தது. அதன் அதிர்ஷ்டம் பானையில் சிறிதளவே தண்ணீர் இருந்தது. அது பானையின் மேல் உட்கார்ந்து தலையை உள்ளே விட்டு தண்ணீர் பருக பார்த்தது. ஆனால் அதற்கு எட்டவில்லை. உடனே அதற்கு தனது சின்ன வயதில் இதே மாதிரி ஒரு காகம் தண்ணீர் எட்டாததால் அருகிலிருந்த சின்ன சின்ன கற்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து பானையின் உள்ளே போட்டு தண்ணீர் பருகி விட்டு சந்தோசத்துடன் பறந்தது நினைவுக்கு வந்தது . ஆனால் அது மாதிரி செய்ய அது விரும்பவில்லை. வேறு என்ன செய்யலாம் என யோசித்தது. உடனே அதை செயல்படுத்தியது. அருகில் காய்ந்த ஆமணக்கு இலைத் தண்டு ஒன்றை தேடி எடுத்தது. அதனை ஸ்ட்ராவாக்கி பானையில் உள்ளே நுழைத்து தண்ணீர் பருகி விட்டு சந்தோசத்துடன் மீண்டும் பறந்தது.